ட்ரம்பின் நாடுகடத்தல் திட்டத்திற்கு எதிராக.,பெண் அதிகாரிக்கு படுகொலை மிரட்டல்: சிக்கிய இரட்டையர்கள்
அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்பு பொது விவகாரங்களுக்கான உதவி செயலாளருக்கு படுகொலை மிரட்டல் விடுத்த இரட்டையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரட்டையர்கள்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நாடுகடத்தல் கொள்கையின் குரலாக செயல்பட்டு வருபவர் டிரிசியா மெக் லாக்லின் (Tricia McLaughlin). 
இவரை சித்திரவதை செய்து, கொல்ல அழைப்பு விடுக்கும் வகையில் இரட்டையர்கள் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
ரிக்கார்டோ அன்டோனியோ, எமிலியோ ரோமன்-ஃப்லோர்ஸ் ஆகிய சகோதரர்கள் வெளியிட்ட இரண்டு தனித்தனி இடுகைகளில், 'Shoot ICE on sight' என்று மக்களை அழைப்பதன் மூலம் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகவர்களை அச்சுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் மூன்று நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது நியூ ஜெர்சியின் அப்செகானில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்
அவர்களில் எமிலியோ மீது தாக்குதல் ஆயுதத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தது, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல், சதி பயங்கரவாத அச்சுறுத்தல்கள், குற்றவியல் வற்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தங்களைத் தடுக்கவோ அல்லது செயல்பாடுகளை மெதுவாக்கவோ முடியாது என்று மெக்லாலின் தெரிவித்தார். 
அதேபோல், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க இயக்குநர் டாட் லியோன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
'எங்கள் துணிச்சலான சட்ட அமலாக்க அதிகாரிகளை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ துணிந்த எவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்' என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |