பிரபல ஹாலிவுட் நடிகர் மரணத்தில் மற்றுமொரு புதிய திருப்பம்: மனைவி கூறிய தகவல்
பிரபல சூப்பர்மேன் திரைப்பட நடிகர் மரணம் தொடர்பில் மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நடிகர்
ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மாதம், அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.
அவர்களுடைய மரணம் தொடர்பில் தொடர்ந்து மர்மம் நீடிக்கும் நிலையில், நாளுக்கொரு புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
மனைவி கூறிய தகவல்
அதாவது, உயிரிழக்கும் முன் ஜீன் ஹாக்மேனின் மனைவியாகிய பெற்சி, தங்களை ஒரு நபர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக தனது சிகையலங்கார நிபுணரிடம் கூறியுள்ளார்.
பெற்சியின் சிகையலங்கார நிபுணரான கிறிஸ்டோபர், ஒரு நபர் தங்களை இரண்டு முறை பின்தொடர்ந்ததாக பெற்சி கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஒருமுறை, ஜீன் ஹாக்மேனும் பெற்சியும் உணவருந்த ஒரு உணவகத்துக்குச் சென்ற நிலையில், அந்த நபர் அவர்களை பின் தொடர்ந்துள்ளார்.
அவர் கையில் ஒரு ஃபோல்டர் முழுவதும் ஜீன் ஹாக்மேனின் புகைப்படங்கள் வைத்திருந்ததாகவும், அவற்றில் ஜீன் ஹாக்மேனிடம் கையெழுத்து பெற்றுத் தருமாறு அவர் தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு பெற்சி அவர் மற்றவர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை அளிக்கவேண்டும் என அவரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த நபர் அவர்களை பின் தொடர்ந்ததாகவும், அவர் அவர்களுக்கு ஒரு போத்தல் ஒயின் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் பெற்சி.
அப்போது, அந்த ஆளிடம் நீங்கள் நெருங்கியிருக்கக்கூடாது, அவர் ஆபத்தானவராக இருக்கலாம் என தான் பெற்சியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் கிறிஸ்டோபர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |