'ட்விட்டரில் மைக்ரோ பிளாக்கிங் தளத்தால் பணமீட்ட முடியும்’ எலோன் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலோன் மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் எனும் தளத்தின் மூலம் ட்விட்டர் பயனாளிகள் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
ட்விட்டரில் சந்தா
ட்விட்டர் பக்கத்தில் தற்போது 4000 வார்த்தைகளுக்கு மேல் எழுத முடியும் என்ற சிறப்பு அம்சத்தை ப்ளூ டிக் வாங்கியுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்ற ட்விட்டர் பயனாளி அதற்கான சந்தா செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தை சில தினங்கள் முன்பு எலோன் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
நீண்ட ட்விட்களை படிக்க கட்டணம்
ஒரு ட்விட்டர் பயனாளி தனது ட்விட்டர் பக்கத்தில் 4000 வார்த்தைகளுக்கு மேல் பதிவிட்ட போது அதற்கு மஸ்க் பதிலளித்துள்ளார் ‘நீண்ட ட்வீட்டை எழுதுவது நல்லது! அடுத்த ட்விட்டர் புதுப்பிப்பு அடிப்படை வடிவமைப்புடன் மிக நீண்ட ட்வீட்களை அனுமதிக்கும், எனவே நீங்கள் ட்விட்டரில் பெரிய பதிவையும் இடுகையிடலாம்.' 'நாங்கள் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
எனவே சில பதிவுகளுக்கு மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் மேலும் அவர்கள் ஒரே கிளிக்கில் எளிதாக பணம் செலுத்தலாம்.' என அவர் கூறியுள்ளார். இதற்கு பலரும் மஸ்க்கின் இடுகையில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
GETTY IMAGES, ISTOCKPHOTO
புதிய திட்டங்கள்
ட்விட்டர் இணையத்தில் ப்ளூ சேவைக்கு மாதம் ரூ 650 மற்றும் இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களில் ரூ 900 வசூலிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியது.
அமெரிக்காவில் உள்ள நீல சந்தாதாரர்கள் 4,000 எழுத்துகள் வரை நீண்ட ட்வீட்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.