ரஷ்யாவில் மாயமான 12 வயது சிறுமிகள்: சடலமாக மீட்கப்பட்ட சோகம்
ரஷ்யாவில் யெனிசேய் ஆற்றில் காணாமல்போன 12 வயது சிறுமிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
12 வயதான இரண்டு சிறுமிகள்
கடந்த 1ஆம் திகதி சைபீரியாவில் துவா குடியரசுப் பகுதியில் 12 வயதான இரண்டு சிறுமிகள் மாயமாகினர்.
கைசிலில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த சிறுமிகள், காணாமல்போனதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது யெனிசேய் ஆற்றங்கரையில் செல்போன்கள் மற்றும் காலணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து யெனிசேய் ஆற்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அடையாள உறுதிப்படுத்தல்
காணாமல்போன சிறுமிகளின் அடையாளங்களுடன் ஒத்துப்போகும் இரண்டு உடல்களை தேடுதல் குழுவினர் மீட்டதாக துவா பகுதியின் தலைவர் விளாடிஸ்லாவ் கோவாலிக் தெரிவித்தார்.
அத்துடன் அதிகாரப்பூர்வ அடையாள உறுதிப்படுத்தல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது டெலிகிராம் பதிவில், "இது நம் அனைவருக்கும் மிகவும் துயரமான மற்றும் வேதனையான தருணம்" என்று குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |