ஏலத்தில் வாங்கப்பட்ட சூட்கேஸ்களில் சடலமாக மீட்கப்பட்ட இரு சிறார்கள் வழக்கில் நெஞ்சை உலுக்கும் திருப்பம்
சிறார்களின் தாயார் காணாமல் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அவர்களின் தந்தை புற்றுநோயால் இறந்தார்
சிறார்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் தகவல்களை வெளியிட வாய்ப்பில்லை
நியூசிலாந்தில் ஏலத்தில் வாங்கப்பட்ட சூட்கேஸ்களில் சடலமாக மீட்கப்பட்ட இரு சிறார்கள் வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறார்களின் தாயார் காணாமல் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அவர்களின் தந்தை புற்றுநோயால் இறந்தார் என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
@getty
நியூசிலாந்தில் கடந்த 11ம் திகதி வெளியான குறித்த தகவலால் உலக நாடுகளில் பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த சூட்கேஸ்களில் சடலமாக மீட்கப்பட்ட சிறார்கள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2017ல் குறித்த சிறார்கள் இருவரின் தந்தை புற்றுநோயால் இறந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து, நியூசிலாந்து மற்றும் தென் கொரிய பொலிசார் தற்போது குழந்தைகளின் தாயாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொலிஸ் ஆவணங்களில் குறித்த தாயார் மாயமானவர் பட்டியலில் இடம்பெற்றாலும், 2018ல் தமது பிள்ளைகள் இருவரை இறக்கவிட்டு அவர் தென் கொரியாவுக்கு தப்பினார் என்றே கருதப்படுகிறது.
கணவர் புற்றுநோயால் இறக்க, பிள்ளைகளை நியூசிலாந்தில் விட்டுவிட்டு அல்லது பெட்டிக்குள் அடைத்து அவர் தென் கொரியாவுக்கு தப்பியிருக்கலாம் என்றே பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், தென் கொரியாவை சேர்ந்த இருவரும் நியூசிலாந்தில் வைத்தே திருமணம் செயுதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சிறார்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஆனால் சட்டவிதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட வாய்ப்பில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறார்கள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது அவர்களின் மரணத்திற்கான சூழ்நிலை குறித்தும் விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.