காபூலில் இருந்து தப்பித்த இரண்டு குழந்தைகளின் பாசப்போராட்டம்! மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி
தாலிபான்களிடம் இருந்து தப்பித்து இந்தியாவிற்கு திரும்பிய இரண்டு சகோதரிகள் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால் ஆப்கன் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க இந்தியா விமானப்படை விமானம் ஒன்றை அனுப்பியது. அதில் இந்தியர்களுடன் சேர்த்து 168 ஆப்கன் மக்களும் இந்தியா திரும்பியுள்ளனர்.
#WATCH | An infant was among the 168 people evacuated from Afghanistan's Kabul to Ghaziabad on an Indian Air Force's C-17 aircraft pic.twitter.com/DoR6ppHi4h
— ANI (@ANI) August 22, 2021
இதையடுத்து இந்தியாவிற்கு திரும்பி வந்த குழந்தைகளில் ஒன்று தாலிபான்களிடம் இருந்து தப்பி வந்த சந்தோஷத்தில் தனது தங்கையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
ஆப்கானில் உள்ள பெண் பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் தாங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக இந்திய மண்ணிற்கு திரும்பியதை நினைத்து இரண்டு குழந்தைகளும் அன்பை பரிமாறி கொள்கின்றது.