பிரான்சில் ஒரே வாரத்தில் இரண்டு தேவாலயங்களுக்கு தீவைப்பு: மேக்ரான் விதித்துள்ள தடை
பிரான்சில் ஒரே வாரத்தில் இரண்டு தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஸ்டில் தினம் வேறு நெருங்கி வருவதால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளார்.
ஒரே வாரத்தில் இரண்டு தேவாலயங்களுக்கு தீவைப்பு
இளைஞர் ஒருவர் போக்குவரத்து பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்சில், மற்றொரு தேவாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
பிரான்சின் Descartes நகரில் உள்ள Saint-Georges De La Haye-Descartes தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தேவாலயத்தின் கூரையும் மணிகோபுரமும் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாவிவிட்டன.
கடந்த மூன்று நாட்களில் பிரான்சில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட இரண்டாவது தேவாலயம் இதுவாகும். ஏற்கனவே, இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 8ஆம் திகதியன்று, Drosnay எனுமிடத்தில் அமைந்துள்ள பதினாறாம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றின்மீது தீவைக்கப்பட்டது.
பிரான்ஸ் ஜனாதிபதி விதித்துள்ள தடை
இந்நிலையில், பாஸ்டில் தினத்தை முன்னிட்டு மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளார்.
France 24
காரணம், Nahel (17) என்னும் அந்த இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது, போராட்டக்காரர்கள் பொலிசார் மீது பட்டாசுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |