ஓமன் கடல் பகுதியில் கண்ணி வெடியில் சிக்கிய 2 எண்ணெய் கப்பல்கள்: ஈரான் எச்சரிக்கை
Two Crude Tankers hits Naval Mine in Oman;s coast: ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது.
கண்ணி வெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்கள்
வியாழக்கிழமை ஓமன் கடல் பகுதியில் கசாப் துறைமுகத்திற்கு வடக்கே இரண்டு எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தை ஈரானின் புரட்சிகர காவல் படையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கி வெடித்த Supertanker என்ற பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை சுமந்து சென்றதுள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்களில் வெளியான தகவலில், விபத்தில் சிக்கிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை தவிர்த்து சட்டவிரோதமான பாதையில் சென்றதே கண்ணிவெடியில் சிக்கி வெடிப்பதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்பை நம்பி இந்த கப்பல்கள் இந்த தடை செய்யப்பட்ட பாதையில் பயணித்து விபத்தில் சிக்கியதாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த கப்பல்கள் ரேடார்களில் இருந்து தப்பிப்பதற்காக அடையாளங்களை மறைத்ததோடு, வழிகாட்டி கருவிகளும் (Navigation systems) அணைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.