வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் மரணம்: தமிழகத்தில் சோகம்
சேலம் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இருவர் உயிரிழப்பு
சேலம், செங்கவல்லி அருகே உள்ள செந்தாராப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு சின்னப்பொண்ணு என்ற 77 வயது மூதாட்டி வாக்களிப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனே அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்பினர். ஆனால், அவர் சுயநினைவின்றி இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல சேலம் மாநகராட்சி நடுநிலை பள்ளி வளாகத்தில் வாக்களிக்க சென்ற சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவர் தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றுள்ளார்.
அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வாக்குச்சாவடி மையத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |