ஒரே இரவில் கோடீஸ்வரியாக மாறிய 50 வயது பெண்! அள்ளிக் கொடுத்த அதிர்ஷ்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு இந்தியர்கள் ஒரே இரவில் கோடிஸ்வரர்களாக மாறியுள்ளதால், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் Deepa என்பவர் கேரளாவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.
அப்போது அவருடைய மின்னஞ்சலுக்கு வந்த தகவல் எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு கோடீஸ்வரியாக மாற்றியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பின் என் பெற்றோருடன் மீண்டும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், இந்த முறை நான் ஒரு கோடீஸ்வரியாகவுள்ளதால், இந்த நாள் மற்றும் தருணத்தை எப்போதும் மறக்கமாட்டேன்.
என்னால் பேசமுடியவில்லை, உண்மையில் நான் என்னுடைய மகிழ்ச்சியை எப்படி விளக்குவது என்பதே தெரியவில்லை, நான் என் பெற்றோரைப் பார்த்த ஒரே நாளில் Dh1,000,000(இலங்கை மதிப்பில் 5,43,73,608 கோடி ரூபாய்) திர்ஹாம் வென்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.
சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் 50 வயதான Deepa, கடந்த 18 வருடங்களாக தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.
இவர் மற்றும் இவர் கணவர் இருவருமே Mahzooz குலுக்கலில் கலந்து கொண்டுள்ளனர். Mahzooz என்பது உங்களுக்கு அதிர்ஷத்தை கொடுப்பதாக நம்பப்படும் 6 எண்களை கொண்ட விளையாட்டு ஆகும்.
இதற்காக நீங்கள் www.mahzooz.ae இணையதளத்தில் சென்று ஒரு வாட்டர் பாட்டில் வாங்குவதன் மூலம் அதில் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்கள் அந்த இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதன் பின் அந்த வாரத்தில் நடத்தப்படும் குலுக்கலில் அந்த எண் வந்தால் நீங்கள் வெற்றியாளர். அப்போது உங்களுக்கான பரிசுத் தொகை கொடுக்கப்படும். அந்த வகையில், Deepa மற்றும் அவரின் கணவர் சேர்ந்து இதில் கலந்து கொண்டு வந்துள்ளனர்.
இதில் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதற்காகவே இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இறுதியில், Deepa ஒரு அதிர்ஷ்டசாலியாக மாறி கோடீஸ்வரியாகியுள்ளார்.
தன்னுடைய பெற்றோரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்த சூழ்நிலையில் இந்த பணம் அவர்களை பாதுகாக்க உதவும் என்றும், என்னுடைய இரண்டு குழந்தைகளின் படிப்பிற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த மற்றொரு இந்திய நாட்டவர் 40 வயது மதிக்கத்தக்க Baranidaran இதே குலுக்கலில் Dh1,000,000(இலங்கை மதிப்பில் 5,43,73,608 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.
இவர் தன்னுடைய அதிர்ஷ்ட எண் 7-ஐ வைத்து எண்களை தெரிவு செய்துள்ளார். அதே போன்று குலுக்கலும் கடந்த 7-ஆம் திகதி தான் நடைபெற்றது.
ஒரே இரவில் தன் வாழ்க்கை மாறியுள்ளதாக கூறும் இவர், கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வந்து தங்கியுள்ளேன். இப்போது பெற்றோரை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளேன் பெரும்பாலான வெளிநாட்டவர்களுக்கு, பெற்றோரிடமிருந்து விலகி வாழ்வது எப்போதும் ஒரு பெரிய கவலையாக இருக்கிறது.
நான் எப்போதும் என் பெற்றோரை என்னுடன் வாழ விரும்பிகிறேன்.
ஆனால் அதற்கான போதிய பண வசதி என்னிடம் இல்லை. இப்போது, என்னால் அவர்களை அழைத்து வந்து உடன் வைத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
அடுத்த Mahzooz குலுக்கல் வரும் 14-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.