லண்டனில் இரட்டை கத்திக்குத்து: கொலை முயற்சி வழக்கில் ஒருவர் அதிரடி கைது
தென் மேற்கு லண்டன் பகுதியில் நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவத்தில் ஆண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை கத்திக்குத்து
தென் மேற்கு லண்டன் பகுதியின் சர்பிடனில் (Surbiton) நடந்த இரட்டை கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்பிடன் பகுதியில் மதியம் 1.45pm மணியளவில் நடைபெற்ற இந்த இரட்டை கத்திக்குத்து-ல் பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
SKY NEWS
இதில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் போர்ட்ஸ்மவுத் சாலையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், மற்றொரு நபர் பக்கத்தில் உள்ள BMW கேரேஜில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக சர்ரே பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது
இந்த சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆண் ஒருவரை சர்ரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Sky News
அப்போது பொலிஸார் வழங்கிய தகவலில், கத்திக்குத்து சம்பவம் மிகவும் கவலைக்குரிய நிகழ்வு என்றும், இது தனிப்பட்ட காரணங்களால் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என்பதை நாங்கள் நம்புகிறோம் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |