சிறையில் ஆறு ஆண்டுகள்... வலுக்கட்டாயமாக தூக்கிலிடப்பட்ட இரு இளைஞர்கள்: அவர்கள் செய்த குற்றம்?
ஈரானில் தன்பாலின உறவு சட்டவிரோதம் என்ற விதி அமுலில் இருக்கையில், இளைஞர் இருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் வடமேற்கு நகரமான மரகேவில் உள்ள சிறையில் குறித்த இளைஞர்கள் இருவர் தூக்கிலிடப்பட்டனர். தன்பாலின ஈர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்ட Mehrdad Karimpour மற்றும் Farid Mohammadi ஆகிய இருவருக்குமே நீண்ட 6 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் ஈரான் நீதிமன்றம் மரண தண்டனைக்கு விதித்திருந்தது.
ஞாயிறன்று குறித்த இளைஞர்களின் சடலங்களை அடையாளம் கண்டுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் அமைப்பு ஒன்று, இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் உள்ளூர் பத்திரிகைகள் எதுவும் குறித்த தகவலை இதுவரை வெளியிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.
ஈரானின் சிறைகளில் குவிக்கப்பட்டிருக்கும் மக்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்ல எனவும், பழி வாங்கும் நடவடிக்கை மட்டுமே எனவும், ஈரானில் இருந்து ஜேர்மனிக்கு தப்பிய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களை அடையாளம் காணும் ஈரான் அரசு, கண்டிப்பாக அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது உறுதி என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
இது போன்ற மரணதண்டனைகளை அங்கீகரித்த ஆட்சி அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் மீது சர்வதேச சமூகம் மனித உரிமைகளுக்கு எதிரான துஸ்பிரயோகம் என குறிப்பிட்டு தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 2021ம் ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 85 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.