தேசத்துரோக விசாரணை... இரண்டு ரஷ்ய ஏவுகனை விஞ்ஞானிகளுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை
ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள், தேசத்துரோகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு, இருவரும் பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசத்துரோக வழக்கு
தேச பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது வலேரி ஸ்வெகிந்த்ஸேவ் மற்றும் விளாடிஸ்லாவ் கால்கின் ஆகியோரின் விசாரணை.

இது, அதிவேகப் பறத்தல் குறித்து ஆய்வு செய்து வந்த விஞ்ஞானிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்குகளின் வரிசையில் மிகச் சமீபத்திய ஒன்றாகும்.
உக்ரைனுடனான போரில் பயன்படுத்தியுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியில் ரஷ்யா உலக அளவில் முன்னணியில் இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லக்கூடிய வகையில், இந்த ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைப்போல 10 மடங்கு வரையிலான வேகத்தில் பயணிக்க வல்லவை.
இந்த நிலையில், இத்தகைய முக்கியத்துவமும் நுட்பமும் நிறைந்த ஒரு துறையில், அரசின் கற்பனையான எதிரிகளை வேரோடு அழிப்பதில் FSB பாதுகாப்பு சேவைக்கு இருக்கும் தீவிரத்தையே இந்த வழக்குகள் பிரதிபலிப்பதாக விஞ்ஞானிகளின் ஆதரவாளர்கள் கூறினர்.
விஞ்ஞானிகளுக்கு எதிராக
மேலும், 2023-ல் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த காலமும், அவர்கள் மீதான விசாரணைகளும், மற்ற சக ஊழியர்களுக்கு எதிராக ஆதாரங்களை வழங்குவதற்காக அரசு சட்டத்தரணிகளுடன் எந்தவொரு பேரம் பேசுவதற்கும் அவர்கள் இருவரும் சம்மதிக்கவில்லை என்பதற்கான அறிகுறி என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில், மாக் 5-ஐத் தாண்டிய (மணிக்கு 3,800 மைல்கள் அல்லது 6,115 கி.மீ.-க்கும் அதிகமான) வேகத்தில் பறப்பது குறித்த ஆய்வான ஹைப்பர்சோனிக்ஸ் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு எதிராக ரஷ்யா குறைந்தது 10 தேசத்துரோக வழக்குகளைத் தொடுத்துள்ளது.
மட்டுமின்றி, அந்த விஞ்ஞானிகள் குற்றமற்றவர்கள் என வாதிட்ட நிலையில், அவர்களுடைய வெளியீடுகளுக்கும் சர்வதேச அறிவியல் மாநாடுகளுக்கான பயணங்களுக்கும் ரஷ்யப் பாதுகாப்புச் சேவைகள் முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்ததாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |