வெளிநாட்டில் நூலிழையில் உயிர் தப்பிய ஈரானிய பிரபலம்: சிக்கிய ரஷ்யர்கள் இருவர்
ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளர் மாசிஹ் அலினெஜாட்டை அவரது புரூக்ளின் வீட்டில் படுகொலை செய்ய நடத்தப்பட்ட சதித்திட்டத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுளார்.
இருவரும் குற்றவாளிகள்
குறித்த வழக்கில் சிக்கியுள்ள இரு ரஷ்யர்கள் தற்போது தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இருவருக்கும் 55 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மாசிஹ் அலினெஜாட் தரப்பில் மன்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்யர்கள் தரப்பில் தலா 13 மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நடந்த இரண்டு வாரம் நீடித்த நீதிமன்ற விசாரணையில், ரஷ்யர்கள் இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, செவ்வாயன்று தமது ஆதரவாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், அந்த ரஷ்யர்கள் இருவரையும் எதிர்கொள்ள தாம் நீதிமன்றத்தில் இருக்க திட்டமிட்டுள்ளதாக அலினெஜாட் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கில் சிக்கியுள்ள இருவரும் ரஷ்யாவின் மிக மோசமான Gulici அமைப்பின் உறுப்பினர்கள் என்றும், இந்த அமைப்பானது அமெரிக்கா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொலை, தாக்குதல், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், கொள்ளை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை முன்னெடுத்து வருகிறது என்றே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்
2020 மற்றும் 2021ல் Alinejad-ஐ அமெரிக்காவில் இருந்து கடத்த ஈரானிய உளவுத்துறை அதிகாரிகள் முயன்றுள்ளனர். 2022 ஜூலை மாதம் Alinejad-ஐ படுகொலை செய்பவர்களுக்கு 500,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்தது.
ஈரான் அரசாங்கத்தின் கொடுமை, ஊழல் மற்றும் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்துவதால், Alinejad தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, 500,000 டொலர் தொகைக்காக 46 வயது ரஃபாத் அமிரோவ் மற்றும் 41 வயது போலட் ஓமரோவ் ஆகியோர் அமெரிக்காவில் குடியிருக்கும் Alinejad-ஐ படுகொலை செய்ய திட்டமிட்டனர்.
அதில் அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மட்டுமின்றி, படுகொலை சதி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இரண்டு டசின் முறை தாம் தங்குமிடத்தை மாற்றியதாகவும் Alinejad தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |