விமானநிலையத்தில் விளையாட்டாக செய்த செயலால் கோடீஸ்வரர்கள் ஆன 2 தமிழர்கள்! இறுதிச்சடங்குக்கு பின் நடந்த ஆச்சரியம்
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினரை அழைத்து வர விமான நிலையம் சென்றதால் இரண்டு தமிழர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லொட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை, கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் லொட்டரி சீட்டு விற்பனை மூலம் அதிஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட லொட்டரியில் முதல் பம்பர் பரிசாக ரூ 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதில், ஹெச்பி 727990 (HB 727990) என்ற எண் கொண்ட லொட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.
கோடிகளில் குவிந்த பணம்! பல்வேறு சர்ச்சைகளையும் சாணக்கியத்தனத்தால் வென்றெடுத்த தமிழர்
அந்த சீட்டு வாங்கியது யார் எனத் தெரியவில்லை. லொட்டரி சீட்டு வாங்கிய ஒட்டுமொத்த மக்களும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என குழப்பத்துடன் தேடி வந்தனர். இந்த நிலையில், இரண்டு தமிழர்களுக்கு பம்பர் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.
Express
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பிரதீப்குமார் (50). கடந்த 15 ம் திகதி பிரதீப்குமார் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார்.
உடன் மைத்துனர் ரமேஷ் (64) என்பவரும் சென்றார். விமான நிலையத்தில் இருவரும் சேர்ந்து வாங்கிய கேரள விசு பம்பர் லாட்டரி சீட்டுக்கு தான் ரூ 10 கோடி பரிசு விழுந்தது. கடந்த 22 ந் திகதி குலுக்கல் நடந்த இந்த பரிசு சீட்டின் அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. லொட்டரி துறை அதிகாரிகள் இந்த அதிர்ஷ்டசாலியை கடந்த 10 நாட்களாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பிரதீப்குமார் மற்றும் உறவினர் ரமேஷ் திருவனந்தபுரம் சென்று லொட்டரி துறை இயக்குனர் அலுவலகத்தில் அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்தனர்.
பிரதீப்குமார் கூறுகையில், எனக்கு லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால், மலையாள புத்தாண்டை முன்னிட்டு விமான நிலைய வளாகத்தில் சிறப்பு குலுக்கல் லொட்டரி விற்பனை செய்ததால் அதை வாங்கலாம் என முடிவு செய்தேன், இதையடுத்து நானும் என் மச்சானும் விளையாட்டாக ஒரு சீட்டை வாங்கினோம்.
லொட்டரி டிக்கெட்டை வாங்கிவிட்டு அதற்கு பரிசு விழுந்ததா என்பதை பார்க்கவில்லை. ஏனென்றால் உயிரிழந்த உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு பணியில் மும்முரமாக இருந்தோம்.
எல்லாம் முடிந்த பின்னர் தான் லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்தது தெரியவந்தது. பரிசு பணத்தில் சில கடன்களை அடைப்பதற்கு உடனடி முன்னுரிமை கொடுப்பேன் என கூறியுள்ளார்.