இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான குகை; எங்கு இருக்கு தெரியுமா?
நாம் வாழும் உலகில் பல விடயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் காணப்படுகின்றது. இயற்கைக்கு மாறாகவும் ஒரு சில விடயங்கள் நடைபெறுகின்றது.
அந்தவகையில் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாஜா குகை ஒன்று இருகின்றது. இங்கு பல சுவாரஸ்யமான இடங்கள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
இரண்டாயிரம் ஆண்டு பழமையான குகை
இந்தியாவில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் ஆச்சரியமளிக்கக் கூடிய இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாஜா குகைகள் இருகின்றது.
இந்த பகுதியில் பௌத்த கலாச்சாரமும் கலைநயமும் எழுச்சி பெற்று வருகின்றது. இதற்கு சான்றாகவே லோனாவாலாவில் இந்த பாஜா குகைகள் இருக்கின்றன.
Bhaja Caves
பாஜா குகை மட்டுமல்லாமல் அருகாமையில் இருக்கும் கர்லா குகைகள் மற்றும் பெட்சா குகைகளும் புத்த குகை வடிவங்களுக்கு சான்றாக இருந்து வருகின்றது என்பதில் ஜயமில்லை.
சஹ்யாத்ரி மலைகள் எனப்படும் இந்த பகுதியில் புல் தவளைகள் முதல் மலபார் அணில்கள் வரை பல உயிர்கள் வாழ்கின்றன.
பாஜா குகைகள்
தக்காண பீடபூமியில் இருக்கும் இந்த புத்த பாறை குகைகள் சுமார் 22 பெரிய பாறைகள் வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதை வழிபாட்டு அரங்குகள், மடாலய குகைகள் என இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். 12வது குகை மட்டும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது, இது முக்கிய வழிபாட்டு அரங்காக இருந்திருக்கலாம் என்கின்றனர்.
மடாலய குகைகளில் துறவிகள் வசித்துள்ளனர். துறவிகளின் எளிமையான வாழ்வையும் ஆன்மிக பழக்கவழக்கங்களை பற்றி பார்க்ககூடியதாக இருக்கும்.
இந்த குகைகளில் துறவிகள் வாழ்வது மட்டுமல்லாமல் பல மைல் தூரம் பயணம் செய்யும் துறவிகளுக்கு தங்குமிடமாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |