வெளிநாட்டில் உடல் உறைந்து மரணமடைந்த சீன பெண்கள் இருவர்: அதிகாரிகள் அவசர எச்சரிக்கை
விக்டோரியா மாகாணத்தின் மிக உயரமான சிகரத்திற்கு அருகே ஒரு வாரத்திற்கு முன்பு உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரது சடலங்களும்
அத்துடன் அதிகாரிகள் தரப்பில் இருந்து பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த பெண்கள் இருவரில் ஒருவர் 20 வயது கடந்தவர் என்றும் இன்னொருவர் 30 வயது கடந்தவர் என்றும் கூறப்படுகிறது.
Bogong சிகரம் நோக்கி பயணப்படும் மலையேறுபவர்கள் பொதுவாக ஓய்வெடுக்கப் பயன்படுத்தப்படும் Cleve Cole முகாமிற்கு அருகிலேயே இருவரது சடலங்களும் அக்டோபர் 3ம் திகதி மலையேறுபவர்களுக்கான மருத்துவர்களால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மிகக் கடுமையான வானிலையின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏதும் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் சீன நாட்டவர்கள் என மெல்போர்னில் உள்ள சீன துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய துயரச் சம்பவமானது, அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்கும் சீனப் பிரஜைகள் தயாராக புறப்படுமாறு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, Bogong சிகரம் நோக்கி பயணப்படும் அந்த இருவரிடமும் தகவல் தொடர்பு அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
உடல் உறையும் நிலை
பகல் நேரத்தில் இந்தப் பகுதி சமாளிக்கக் கூடியதுதான், ஆனால் நிலைமைகள் விரைவாக மாறக்கூடும் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். மட்டுமின்றி, சடலமாக மீட்கப்பட்ட சீனத்து பெண்கள் இருவரும் தவறான பாதையில் பகல் பயணித்திருக்கலாம் என்றும், இதனாலையே உடல் உறையும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறுகின்றனர்.
பொலிசார் தெரிவிக்கையில், வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வானிலை நிலவிய காலத்தில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்கள் பயணித்த நாட்களில் வானிலை -2.8C என பதிவாகியிருந்ததாகவும், அப்பகுதி முழுவதும் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |