3 டோஸ் தடுப்பூசி தான் கொரோனாவிடமிருந்து முழுமையாக பாதுகாக்குமா? வெளியான முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசியின் 3வது டோஸ் தேவை குறித்து ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு விளக்கமளித்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கொரோனா தடுப்பூசியின் 3வது டோஸ் போட அங்கீகாரம் பெற Pfizer-BioNTech திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தடுப்பூசி போடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் மற்றும் மிக தீவிரமான டெல்டா மாறுபாடு பரவுவதற்கான ஆபத்து இருப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் Pfizer-BioNTech 3வது டோஸ் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இரண்டு டோஸூக்கு மேல் தடுப்பூசி தேவையா என்பது குறித்து தீர்மானிக்க இன்னும் நாட்கள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு கூறியுள்ளது.
இரண்டு டோஸ் போதுமானது என்று இப்போது நம்பிக்கை இருப்பதாக ஐரோப்பிய மருந்துக்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தடுப்பூசிகளால் கிடைக்கும் பாதுகாப்பின் அளவு குறித்து தேவையான தகவல்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.