Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு, பிரித்தானியாவிற்கு முதல் இரண்டு ஆண்டுகளில் £27 பில்லியன் ($34 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) சார்பில் செயல்படும் Centre for Economic Performance நடத்திய ஆய்வின் படி, இந்த இழப்பு பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த வர்த்தக உறவுகள் உடைந்ததால் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
இதில் சிறு நிறுவனங்களுக்கு மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறு நிறுவனங்கள் புதிய வர்த்தக தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்தை நிறுத்தி விட்டன.
ஆனால், பாரிய நிறுவனங்கள் Brexit-க்கு பின்னரும் பெரும்பாலும் முந்தைய அளவிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளன.
லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்த LSE ஆய்வாளர்கள், 2022 இறுதிக்குள் பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி 6.4 சதவீதமும் மற்றும் இறக்குமதி 3.1 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக OBR, பிரெக்சிட் காரணமாக 15% வர்த்தக இழப்பு மற்றும் 4% தேசிய வருவாய் வீழ்ச்சி ஏற்படும் என்று கணித்தது. ஆனால் தற்போதைய தரவுகள் அடிப்படையில், இந்த இழப்புகள் குறைவாகவே உள்ளன.
அண்மைய மாற்றங்கள் மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தைகள்
2024 ஜனவரியில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கையை (TCA) மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
தற்போதைய TCA பல சுங்கச் சோதனைகள், கூடுதல் ஆவணப்பணிகள் மற்றும் மூலப்பொருட்களின் இடமாற்றத்திற்கான கட்டுப்பாடுகள் போன்ற தடைகளைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
brexit, United Kingdom European Union, Two years of Brexit cost UK 27 billion Pounds