வீட்டில் இருந்த 1000க்கும் அதிகமான சிறுமிகள், குழந்தைகளின் புகைப்படங்கள்! சோதனையின் போது அதிர்ந்த பொலிசார்
அமெரிக்காவில் சிறுமிகள், சிறுவர்கள், குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை மின்னணு சேமிப்பு சாதனங்களில் வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெக்ஸாஸை சேர்ந்த நண்பர்கள் Raul Moctezuma மற்றும் Carbajal. இவர்கள் வீட்டுக்கு சந்தேகத்தின் பேரில் பொலிசார் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் இருந்த மின்னணு சேமிப்பு சாதனங்களில் 1000க்கும் அதிகமான சிறுமிகள், சிறுவர்கள், குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதை கண்டு பொலிசார் அதிர்ந்தனர்.
அவை அனைத்தும் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டு பேரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் Carbajalன் பிணைத்தொகையாக $25,000ஐ நிர்ணயித்து நீதிபதி ஹாமில்டன் உத்தரவிட்டுள்ளார். மேலும் Raul தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.