தைவான், பிலிப்பைன்ஸை தாக்கிய கேமி புயல்: கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி கேமி பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேமி ஏற்படுத்திய சேதத்தில் 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு கப்பல்கள் நீரில் மூழ்கியுள்ளன. அவற்றில் ஒன்று மில்லியன் லிட்டர் எண்ணெயை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
தைவானில் கடும் சேதம்
இது தைவானில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளியாகும்.//// 141 மைல் வேகத்தில் வீசிய காற்று மற்றும் கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
Typhoon Gaemi, also known as Carina, is now the equivalent of a Category 3 hurricane and has caused more than a dozen deaths in the Philippines https://t.co/TkX6Q2wgkV pic.twitter.com/d60q8nmCrr
— AccuWeather (@accuweather) July 24, 2024
நடுப்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட மும்பை பொறியாளர்! அதிர்ச்சி வீடியோ
தைவானின் தெற்கு துறைமுக நகரான காசியோங்கில் தான்சானிய கப்பல் ஒன்று மூழ்கியது. அதில் இருந்த மியான்மர் நாட்டை சேர்ந்த குழுவினர் காணாமல் போயுள்ளனர்.
கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்
சூறாவளி கேமி(Typhoon Gaemi) பிலிப்பைன்ஸில் பருவ மழையை அதிகரித்துள்ளது, இதனால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
1.4 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எண்ணெயை கொண்டு சென்ற ஒரு எண்ணெய் தொட்டி கப்பல் கடலில் மூழ்கியது. ஆனால் அதில் இருந்த பெரும்பாலான குழுவினர் காப்பாற்றப்பட்டனர்.
அத்துடன் சூறாவளி மேற்கு நோக்கி நகர்ந்ததால், சீனா தனது கடற்கரைக்கு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியமாக மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,50,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |