சீனா அருகே வலுவடையும் கஜிகி புயல்., 6 லட்சம் மக்களை இடம்மாற்ற வியட்நாம் திட்டம்
கஜிகி புயல் தீவிரமடைந்துவரும் நிலையில், வியட்நாமில் 6 லட்சம் மக்கள் இடம்மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
வியட்நாம் மற்றும் சீனாவின் Hainan தீவிற்கு அருகே கஜிகி புயல் (Typhoon Kajiki) மிக வேகமாக நெருங்கி வருவதால், இரு நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வியட்நாமில்...
வியட்நாமில் 5,86,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Thanh Hoa, Quang Tri, Hue மற்றும் Danang ஆகிய மத்திய மாகாணங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மத்தியத்திற்கு பிறகு மக்கள் வெளியே செல்லவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடலோர மாகாணங்களில் படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Vietnam Airlines 22 விமானங்களை ரத்து செய்துள்ளது. VietJet நிறுவனமும் விமானங்களை ரத்து மற்றும் தாமதம் செய்துள்ளது.
சீனாவில்...
சீனாவின் கடற்கரை சுற்றுலா நகரமான சான்யாவில் அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கட்டுமான பணிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
320 மி.மீ. வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் வேகம் மணிக்கு 180 கி.மீ. அதிகரிக்கும் என சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சான்யா நகரம், மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான சிவப்பு புயல் எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Typhoon Kajiki, Vietnam evacuation, China Sanya shutdown, Hainan storm alert, Red typhoon warning, Kajiki landfall 2025, Southeast Asia cyclone, Extreme weather Asia, Climate disaster Vietnam, Tropical storm China