பொலிஸாரின் விசாரணை அறையில் துளையிட்டு தப்பிச் சென்ற கொலையாளி: சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவில் விசாரணை அறையில் துளையிட்டு கைதி ஒருவர் தப்பிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இளைஞரின் வெறிச்செயல்
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் குடும்பத்தினர் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக 24 வயதான அட்லாய் மெஸ்ட்ரே(Adlai Mestre) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பேராசை காரணமாக தனது தாய், தந்தை, சகோதரி ஆகியோரையும் வளர்ப்பு நாயையும் சுட்டுக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்த போது தனது குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்பது போல் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அறையில் இருந்து தப்ப முயற்சி
இந்நிலையில் அட்லாய் மெஸ்ட்ரே கைது செய்யப்பட்டு விசாரணையில் அறையில் தனியாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த போது அவர் அங்குள்ள அறையை கால்களால் எட்டி உதைத்து துளையிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்கள் பரவி வருகிறது, ஆனால் தப்பிக்க முயன்ற நபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
In the U.S., a killer escaped from an interrogation room by kicking a hole in the wall: before that, he had confessed to how he dealt with his family
— NEXTA (@nexta_tv) November 19, 2024
24-year-old Adlai Mestre was arrested in New Mexico after confessing to the murder of his family and dog.
The man, covered in… pic.twitter.com/nbOtIEGxFE
அவர் மீது கொலை குற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரணையில் அறையில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொலிஸார் அவருக்கு மனநல பிரச்சினைகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |