சீன பொருட்கள் மீது 104% வரி விதித்த அமெரிக்கா: நிறைவடைந்த 24 மணி நேர கெடு!
சீன பொருட்களுக்கு 104% வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்த உள்ளது.
சீனாவுக்கு 104% வரி விதிப்பு
அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்திருந்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அமெரிக்கா சீனா மீது அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீதம் வரை வரியை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, சீனா தனது வரி உயர்வை திரும்பப் பெறாவிட்டால், இன்று முதல் 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், சீனாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் முறித்துக் கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த வர்த்தக தடைகள் நாளை முதல் கணிசமாக அதிகரிக்கவுள்ளன என்பதையும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முந்தைய நிர்வாகத்தின் சீன பொருட்களுக்கான கூடுதல் 50% வரி விதிப்பு முன்மொழிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கரோலின் லீவிட், "இது இன்று இரவு 12.01 மணிக்கு நடைமுறைக்கு வரும்(அதாவது நாளை முதல்) என்று தெரிவித்தார்.
சீனாவுடன் உடன்பாடு ஏற்படுமா?
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் எதிர்காலத்தில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும் பதிலளித்த லீவிட், சீனா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என நம்புவதாக குறிப்பிட்ட அவர், மேலும், "சீனா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தாக வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் முந்தைய வர்த்தக மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், "சீனா பதிலடி கொடுத்தது தவறு. அமெரிக்கா தாக்கப்படும்போது, நாங்கள் இன்னும் கடுமையாக பதிலடி கொடுப்போம்," என்று தெரிவித்தார்.
இது இரு பெரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையேயான வர்த்தக உறவுகளில் ஒரு கடுமையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |