உக்ரைன் மீது போர் தொடுக்க தூண்டும் அமெரிக்கா: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் காட்டம்
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்காக, அமெரிக்கா தங்களை போருக்கு தூண்டுவதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மாஸ்கோவில் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓபன் ஆகியோரின் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய ஜனாதிபதி புதின் அமெரிக்கா தங்களை உக்ரைன் மீது போர் தொடுக்க தூண்டுவதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கா, ரஷ்யாவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது. அதற்காக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தால் அதனை காரணமாக கொண்டு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அதனை கொண்டு ரஷ்யாவின் வளர்ச்சியை குலைக்க அமெரிக்கா நினைப்பதாக புதின் தெரிவித்துள்ளார். இதற்கு உக்ரைனை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் உக்ரைனை நேட்டோ அமைப்புடன் இணைப்பது என்பது உலக அமைதியை சீர்குலைக்கும் எனவும், 2014 ரஷ்யா கைப்பற்றிய crimeaவை இன்னும் உலக நாடுகள் அங்கீகரிக்காத நிலையில், மேற்கு நாடுகளுடன் உக்கிரைன் இணைவது மூலம் crimeaவை மீண்டும் கைப்பற்ற முயற்சி நடக்கலாம். இதனால் ரஷ்யா படைகளும் நேட்டோ படைகளுக்கும் போர் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு உக்கிரைன் மீது போர் புரியும் எண்ணம் இல்லை எனவும், ஆனால் தங்களின் முக்கிய கோரிக்கையான நோட்டோ படைகளை கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் விரிவுபடுத்த கூடாது. மற்றும் உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் இணைக்கக்கூடாது போன்றவற்றை மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா உறுதி அளிக்கவில்லை எனவும் மேலும் சூழ்நிலைகள் சுமுகமாக முடியும் என்று நம்பதாகவும் ஆனால் அது என்னவென்று தற்போது தன்னால் கூறமுடியாது என விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
உக்ரைன், ரஷ்யா நெருக்கடி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக புதின் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.