ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் UAE
UAE to invest 40 Bn Euro in Germany to boosts tech: ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்துள்ளது.
40 பில்லியன் யூரோ முதலீடு
ஜேர்மனியுடன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 40 பில்லியன் யூரோ (சுமார் $46.5 பில்லியன்) முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, UAE ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யான் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில், ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.

முதலீட்டு துறைகள்
- டேட்டா சென்டர்கள்: சுமார் 1 GW திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் ஜேர்மனியில் அமைக்கப்பட உள்ளன.
- செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
- தொழில், எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள்
ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகள்
- UAE-ஜேர்மனி இடையே Investment Council உருவாக்கப்பட்டது.
- வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த Strategic Dialogue தொடங்கப்பட்டது.
- இரு நாடுகளின் நிறுவனங்கள் 29 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இதன் மொத்த மதிப்பு 9.4 பில்லியன் யூரோ ஆகும்.
- சுமார் 10 பில்லியன் யூரோ முதலீடு Bavaria மாநிலத்திற்கு செல்கிறது.
விமான சேவை விரிவாக்கம்
UAE விமான நிறுவனம் Emirates, பெர்லின் மற்றும் துபாய் இடையே நேரடி சேவை தொடங்க அனுமதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஜேர்மனியின் விதிமுறைகள் காரணமாக Emirates பெர்லினுக்கு சேவை வழங்க முடியவில்லை.
பொருளாதார உறவுகள்
- UAE, ஜேர்மனியின் வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
- இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு 15 பில்லியன் டொலரை கடந்தது.
- BMW, Siemens, ThyssenKrupp போன்ற ஜேர்மன் நிறுவனங்கள் அமீரகத்தில் செயல்படுகின்றன.
இந்த முதலீடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் ஜேர்மனிக்கு பெரும் ஆதரவாக இருக்கும். UAE-யின் நீண்டகால கூட்டாண்மை நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |