இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ்தீர் ஏவுகணைகளை வாங்க UAE திட்டம்
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்தியாவின் பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான்வழி பாதுகாப்பு அமைப்பு மீது ஆர்வம் காட்டி வருகிறது.
சமீபகாலமாக மத்திய கிழக்கில் மோதல்கள் நிலவும் நிலையில், அமீரகம் தனது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவுடன் ஆரம்ப நிலை பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை கடல் மற்றும் நில அடிப்படையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தை பாதுகாக்க UAE-க்கு முக்கிய ஆயுதமாக இருக்கும்.
கடல் வழித் தாக்குதல்களைத் தடுக்கவும், எதிரி தளங்களைத் துல்லியமாக தாக்கவும் பிரஹ்மோஸ் UAE-க்கு வலுவான தாக்குதல் திறனை வழங்கும்.

மறுபுறம், ஆகாஷ்தீர் அமீரகதத்தின் வான்வழி பாதுகாப்பு வலையமைப்பை மேம்படுத்தும். இது ரேடார், சென்சார், தொடர்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை ஒருங்கிணைத்து, வான்வழி அச்சுறுத்தல்களை விரைவாக கண்டறிந்து தடுக்கும் திறனை அதிகரிக்கும்.
UAE ஏற்கனவே அமெரிக்காவின் THAAD மற்றும் Patriot அமைப்புகள், ரஷ்யாவின் Pantsir-S1, தென் கொரியாவின் Cheongung-II போன்ற பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது இந்தியாவின் தொழில்நுட்பத்தை சேர்த்துக்கொள்வது, அதன் பாதுகாப்பு வலையமைப்பை மேலும் பலப்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், UAE-யின் பாதுகாப்பு திறன்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி சந்தையிலும் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |