துபாயில் மீண்டும் கனமழை., சர்வதேச விமான சேவைகள் ரத்து
துபாயில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலத்த காற்றும் வீசியதாக கூறப்படுகிறது.
மே 3-ஆம் திகதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் துபாய் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவசர காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபுதாபியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடந்த மாதம் பெய்த மழையில் துபாயில் வெள்ளம் புகுந்தது. ஏப்ரல் 14, 15 ஆகிய திகதிகளில் கனமழை பெய்தது.
1949-ம் ஆண்டு முதல் இதுவரை இவ்வளவு மழை பெய்யவில்லை என துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையால் பலர் உயிரிழந்துள்ளதாக்க கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dubai Heavy Rain, UAE Rain and Floods