விமான கடத்தலை தடுத்த இந்திய விமானிக்கு உயரிய விருது - ஐக்கிய அரபு அமீரகம் கௌரவிப்பு
UAE honor indian pilot smit machchhar: இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருதை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.
விமான கடத்தலை தடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றிய, இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு First Class Order of Zayed II உயரிய விருதை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.
விமானி ஸ்மித் மச்சார்
கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி அன்று Flydubai விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானி ஸ்மித் மச்சார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அவர் படுகாயமடைந்தாலும் சாதூரியமாக செயல்பட்டு கடத்தலை தடுத்து, நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றினார்.
இந்த நிலையில், ஸ்மித் மச்சாரின் அசாத்திய தைரியம் மற்றும் கடமை உணர்வை பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் அவரை கௌரவித்துள்ளது.
ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 'First Class Order of Zayed II' என்ற உயரிய விருதினை ஸ்மித் மச்சாருக்கு வழங்கினார்.