UAE-க்கு ஏவுகணை அச்சுறுத்தல் - பாதுகாப்பான இடத்தை தேடுமாறு மக்களுக்கு எச்சரிக்கை
UAE issues missile threat alert: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக எச்சரிக்கை
நாட்டின் தேசிய அவசரநிலை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வெளியிட்ட அறிவிப்பில், UAE-க்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அபாயம் இருப்பதாகவும், மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை நோக்கி ஏவுகணை தாக்குதல் முயற்சி கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள், பாதுகாப்பான இடங்களில் தங்குங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த எச்சரிக்கை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்திய கிழக்குப் போரினை நிறுத்தும் நோக்கில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஈரான், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பலை ஹார்முஸ் நீரிணையில் தாக்கியதாக UAE குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு போரில், UAE மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பின் தாக்குதல்கள் குறைந்திருந்தன. தற்போது அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், மீண்டும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.
UAE air defence systems detected a missile threat targeting the county. Please remain in a safe location and follow warnings and updates issued through official channels. pic.twitter.com/aobFA9WRdw
— NCEMA UAE (@NCEMAUAE) August 18, 2026
மக்களிடையே பதற்றம்
அமீரக உள்துறை அமைச்சகம், “தற்போதைய சூழ்நிலை காரணமாக மக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடங்களில் தஞ்சம் புக வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.
இந்த எச்சரிக்கை, UAE மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்கள் அமைதியாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |