பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முக்கிய எண்ணெய் முனையத்தை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் Kharg Island எண்ணெய் மையத்தை தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமீரகத்தின் Fujairah துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Fujairah நகரில் உள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையத்தில் கரும்புகை எழுந்தது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில், துறைமுகப் பகுதியில் அடர்ந்த புகை மேகங்கள் தென்பட்டன.

UAE பாதுகாப்புத் துறை, “ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க முயற்சிக்கும்போது, சிதறிய பாகங்கள் விழுந்து தீ ஏற்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “Kharg Island என்பது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய மையம். அதனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது” என்று அறிவித்துள்ளார்.
Large plumes of smoke are seen coming from a major oil facility in Fujairah, UAE, after debris fell from an intercepted Iranian missile, according to the Fujairah media office.#Iran#Israel#Khamenei pic.twitter.com/NYXU4XFRZ2
— Adv. Avtaar S Turka / अवतार तुरका 🇮🇳 (@AvtaarTurka) March 14, 2026
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் காரணமாக, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதேவீதம் வரை இந்த வழித்தடம் வழியாக சென்றதாகவும், தற்போது ஈரான் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம், மத்திய கிழக்கு முழுவதும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலக சந்தையில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
https://t.co/VJl47PA1Vf https://t.co/psVQvfjdy3 pic.twitter.com/zJfIH2ITtw
— OSINTtechnical (@Osinttechnical) March 14, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran Israel war UAE, Fujairah oil terminal fire, US strikes Kharg Island, Strait of Hormuz disruption #IranIsraelWar #UAE #Fujairah #OilCrisis