சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் UAE முதலிடம்; இலங்கை, இந்தியாவின் நிலை என்ன?
uae tops world strongest passport 2026, where india, srilanka stands? ஆர்டன் கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் UAE முதலிடம் பிடித்துள்ளது.
முதலிடத்தில் UAE
ஐக்கிய அரபு அமீரகம், 182 என்ற மொபிலிட்டி ஸ்கோருடன் உலகின் மிக வலிமையான பாஸ்போர்ட்டாக உருவெடுத்துள்ளது.

UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், இந்தப் பட்டியலில் விசா இல்லாமல் 138 நாடுகளுக்கும், வந்தவுடன் விசா வழங்கும் 44 நாடுகளுக்கும் செல்ல முடியும். 16 நாடுகளுக்கு செல்ல சம்பந்தப்பட்ட நுழைவு ஏற்பாடுகளின் கீழ் விசா பெற வேண்டும்.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா 175 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஸ்பெயின் 174 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, ஜப்பான், பெல்ஜியம், லக்ஸம்பர்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் 173 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
பிரித்தானியா 170 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், கனடா 169 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், அவுஸ்திரேலியா 168 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், அமெரிக்கா 167 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளது.
72வது இடத்தில் இந்தியா இந்தியா
70 புள்ளிகளுடன் 72வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் 30 நாடுகளுக்கும், வந்தவுடன் விசா வழங்கும் 40 நாடுகளுக்கும் செல்ல முடியும்.

மற்ற 128 நாடுகளுக்குச் செல்ல, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நுழைவு ஏற்பாடுகளின் கீழ் விசா பெற வேண்டும்.
88வது இடத்தில் இலங்கை
இலங்கை 53 புள்ளிகளுடன் 88வது இடத்தில் உள்ளது. இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் 19 நாடுகளுக்கும், வந்தவுடன் விசா வழங்கும் 34 நாடுகளுக்கும் செல்ல முடியும்.

மற்ற 145 நாடுகளுக்குச் செல்ல, இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நுழைவு ஏற்பாடுகளின் கீழ் விசா பெற வேண்டும்.
பாகிஸ்தான் 42 புள்ளிகளுடன் 97வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 35 புள்ளிகளுடன் கடைசியாக 100வது இடத்திலும் உள்ளது.