UAE விசா அப்டேட்: 82 நாடுகளின் குடிமக்கள் முன் விசா இல்லாமல் நுழைய அனுமதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் 82 நாடுகளின் குடிமக்கள் முன் விசா இல்லாமல் நுழையலாம் என ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விரிவான விசா தகவல்களைத் தேடும் பயணிகள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
115 நாடுகளின் குடிமக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைவதற்கு முன்பு விசாவைப் பெற வேண்டும். 82 நாடுகளின் பட்டியல் மற்றும் பயணிகளுக்கான விசா விலக்குகள் தொடர்பான பிற விவரங்களை அமைச்சகம் வெளியிட்டது.
விசா தொடர்பான தகவல்களில் மேலும் தெளிவு பெற விரும்புவோர், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தகவலைச் சரிபார்க்கலாம்.
GCC குடிமக்களுக்கு விலக்கு
GCC நாடுகளின் குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு விசா அல்லது ஸ்பான்சர் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் தங்கள் GCC நாடு வழங்கிய பாஸ்போர்ட் அல்லது அவர்களின் அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதும்.
மறுபுறம், இந்திய குடிமக்கள் பற்றி பேசுகையில், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய குடிமக்களுக்கு 14 நாட்களுக்கு மட்டுமே விசா வசதி வழங்கப்படுகிறது. அதன் பிறகு அவர் அடுத்த 14 நாட்களுக்கு நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விசா விலக்கு அல்லது விசா-ஆன்-அரைவல் வகைகளின் கீழ் வராதவர்களுக்கு நுழைவு அனுமதி தேவை என்று UAE டிஜிட்டல் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. வருகையின் நோக்கத்தைப் பொறுத்து இந்த அனுமதி, அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருவதற்கு முன்பு வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்திடமிருந்து பெறப்பட வேண்டும்.
தற்போதைய பாஸ்போர்ட் இன்டெக்ஸ் இணையதளத்தில் UAE பாஸ்போர்ட் தற்போது முதலிடத்தில் உள்ளது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 180 நாடுகளுக்கு எளிதாக நுழைய முடியும். மொத்தம் 127 நாடுகள் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UAE visa update, UAE Visa Extension, Dubai Visa Extension New Rules 2023, dubai, UAE, துபாய் விசா நீட்டிப்பு புதிய விதிகள் 2023, ஐக்கிய அரபு அமீரகம்