பயங்கரமான சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது! மணிப்பூரை காப்பாற்றும் நேரம் இது - அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணிப்பூரில் இரண்டு மெய்தி மாணவர்கள் கொள்ளப்பட்டது இணைய சேவை மீண்டும் தொடங்கியதால் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதற்றமான மாநிலம்
மணிப்பூர் கலவரம் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அங்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது குறித்து கேள்விகள் எழுந்தன.
வன்முறை சம்பவங்களின்போது அங்குள்ள பல மாவட்டங்கள் பதற்றமான பகுதிகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில் மணிப்பூர் வன்முறை குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பதிவு
அவர் தனது பதிவில், 'மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் 'விஸ்வகுரு' மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த செயல்பாட்டில் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணைய சேவையை நிறுத்தியுள்ளது.
மாநில மற்றும் யூனியனில் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்றும் நேரம் இது' என தெரிவித்துள்ளார்.
The ongoing violence in #Manipur is deeply worrying. The self-proclaimed 'Viswaguru' claiming to control everything has failed miserably in restoring law and order in Manipur. The resumption of internet services has exposed horrifying incidents like the killing of two Meiti…
— Udhay (@Udhaystalin) September 29, 2023
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |