உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு! சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என மோடி கருத்து
தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உதயநிதியின் பேச்சு
தமிழக அமைச்சர் உதயநிதி, "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.
மேலும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்பட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.
பிரதமர் மோடி கூறியது..
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. அப்போது பேசிய பிரதமர்,"எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.
சனாதன கருத்தை அமைதியாக எடுத்துக்கொள்ளாமல், சரியான பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் இந்தியா- பாரத் பெயர் சர்ச்சை குறித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |