உகாண்டாவில் பயங்கரம்: பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதில் 41 பேர் மரணம்
உகாண்டாவில் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
உகாண்டாவின் Mpondwe நகரத்தில் உள்ள காங்கோ எல்லைப் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்ததாக Pontwe Lubiriha மேயர் Selvest Mapos தெரிவித்தார்.
இறந்தவர்களில் 38 பேர் மாணவர்கள், மற்ற மூவரில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இருவர் உள்ளூர்வாசிகள் ஆவர். மேலும், காயமடைந்த 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பலர் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.
AP
பள்ளி விடுதி மற்றும் சேமிப்பு அறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். பள்ளி மீது வெடிகுண்டு வீசப்பட்டது. சிலர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர். சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய Allied Democratic Forces (ADF) இந்த தாக்குதலை நடத்தியதாக உகாண்டா பொலிஸார் தெரிவித்தனர்.
AFP
பள்ளிகளை எரிப்பதும், மாணவர்களை கொல்வதும், கடத்துவதும் இந்த அமைப்பின் வாடிக்கையாக உள்ளது.
1990-களில் உருவான ADF, 2001ல் ராணுவத்தால் உகாண்டாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. அதன்பிறகு காங்கோவை தளமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிய ஏ.டி.எப்., ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் உறவை ஏற்படுத்தி, உகாண்டாவில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
CNN