திடீரென கார் மீது பொழிந்த துப்பாக்கிக் குண்டு மழை! உயிர்தப்பிய அமைச்சரின் கண்முன்னே துடி துடித்த பலியான மகள்! நெஞ்சை உருக்கும் புகைப்படம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் இராணுவ தளபதியும், நாட்டின் பணிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான Katumba Wamala-வை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு Kisaas-ல் உள்ள Kisota சாலையில் இந்த படுகொலை முயற்சி நடந்துள்ளது.
Kisota சாலையில் தனது காரில் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலருடன் Katumba Wamala பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது இரண்டு பைக்களில் ஆயுதமேந்தி வந்த 4 மர்ம நபர்கள், Katumba Wamala கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
General Katumba wamala has survived an assassination God!!!!!!!! pic.twitter.com/GWvxBA0btU
— Douglas Lwanga (@DouglasLwangaUg) June 1, 2021
இந்த தாக்குதலில் Katumba Wamala-வின் மகள் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#Breaking: Gen Katumba Wamala has just survived an assassination attempt after 4 unknown armed assailants riding on 2 black motorbikes shot at his convoy, according to eye witnesses. He was riding with the daughter, driver and bodyguard. @nbstv #NBSUpdates pic.twitter.com/F3mmst6hEV
— Canary Mugume (@CanaryMugume) June 1, 2021
குண்டடிப்பட்டு படுகாயமடைந்த Katumba Wamala சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.