சிறுவர்கள் உயிரிழந்த ஓரிரு நாட்களுக்கு…மற்றொரு ஏரியில் விளையாடிய பிரித்தானிய இளைஞர்கள்: அதிர்ச்சி காணொளி!
பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உறைந்த ஏரியில் விழுந்து நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் லண்டனில் உள்ள கிளாபம் காமன் என்ற உறைந்த ஏரியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடி வரும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை கலங்கடித்த சோகம்
பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோலிஹல் பகுதியில் உள்ள Babbs Mill என்ற உறைந்த ஏரியில் சிறுவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தி இருந்தது.
இந்த விபத்தில் 8 வயதான Finlay Butler, இவரது சகோதரரான 6 வயது சாமுவேல், இவர்களின் உறவினர் 11 வயது தாமஸ் ஸ்டீவர்ட் மற்றும் இவர்களின் நண்பன் 10 வயது ஜாக் ஜான்சன் ஆகிய நான்கு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
PA
பின்லே மற்றும் சாமுவேலின் பெற்றோர் தெரிவிக்கையில், இத்தகைய துயரமான சூழ்நிலையில் தங்கள் மூன்று பிள்ளைகளும் மரணமடைந்துள்ளது நெஞ்சைப் உடைப்பதாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து சிறுவர்களை மீட்க களமிறங்க மீட்பு படையினர், பிரித்தானியாவில் உள்ள உறைந்த ஏரியில் இருந்து பொதுமக்கள் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.
PA
அதிர்ச்சி காணொளி
பர்மிங்காமில் உள்ள உறைந்த ஏரியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் வலி சுவடுகள் இன்னும் பிரித்தானிய மக்களை விட்டு விலகாத நிலையில், தெற்கு லண்டன் பகுதியில் உள்ள கிளாபம் காமன் என்ற ஏரியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடும் அதிர்ச்சி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த அதிர்ச்சி வீடியோவில், குறைந்தது 7 நபர்களாவது உறைந்த ஏரியில் கவனக்குறைவுடன் நிற்பது தெரிகிறது. அத்துடன் உறைந்த ஏரியில் சிலர் சறுக்கு விளையாட்டு நடத்துவதும் அந்த காணொளி காட்சியின் மூலம் பார்க்க முடிகிறது.
Adults and children seen playing on the iced over water in Clapham Common today ⚠️ Do not risk your life doing this. #news pic.twitter.com/5vqBUE4WtB
— Scarcity News (@ScarcityStudios) December 15, 2022
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வார்டன்கள் உறைந்த ஏரியில் விளையாடிக் கொண்டு இருந்த சுமார் 10 பேரை பிடித்தனர், இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர்.
பனியில் விளையாடிக் கொண்டு இருந்தவர்களை வெளியேறுமாறு எச்சரித்த இரண்டு வார்டன்களை பார்த்து, அவர்கள் ஆபாசமாக கத்த ஆரம்பித்தனர்.