இனி சிரிப்பூட்டும் வாயுவுக்கு தடை., பிரித்தானியாவின் பரபரப்பு முடிவு
சிரிப்பூட்டும் வாயுவை பயன்படுத்துவது தொடர்பாக பிரித்தானியா பரபரப்பு முடிவை எடுத்துள்ளது.
சமூக விரோத நடத்தையைத் தடுக்க சிரிப்பூட்டும் வாயுவின் பொழுதுபோக்குப் பயன்பாட்டை பிரித்தானிய அரசு தடை செய்கிறது.
பொதுவாக சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அதன் சிறிய குப்பிகளின் விற்பனை சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்த சிரிப்பூட்டும் வாயுவை வேடிக்கைக்காக இளைஞர்கள் வேகமாக சுவாசிக்கிறார்கள். எனவே அதன் பொழுதுபோக்குப் பயன்பாட்டைத் தடை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (புதன்கிழமை) பிரித்தானியாவில் சிரிப்பு வாயு வைத்திருப்பது சட்டவிரோதமானது.
விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், வியாபாரிகளுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த வாயுவை நீண்டகாலமாக பயன்படுத்துவதால் ரத்தசோகை, நரம்பு பாதிப்பு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Nitrous oxide, laughing gas, laughing gas illegal in UK, Nitrous oxide Banned in UK, சிரிப்பூட்டும் வாயுவுக்கு தடை., பிரித்தானியா