பிரித்தானியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் பயங்கர விபத்து: 13க்கும் மேற்பட்டோருக்கு காயம்!
பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து
பர்மிங்காமில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில், வியாழக்கிழமை மாலை பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
மாலை 7:30 மணியளவில், சவாரி இயங்கிக் கொண்டிருந்த போது சாதனம் ஒன்று திடீரென தரையிறங்கியது, இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு அவசர சேவைப் படையினர் Centenary சதுக்கப் பகுதிக்கு விரைந்தனர்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, 13 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதில் 2 பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கு மிட்லாண்ட்ஸ் தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் குழுவினருக்கு உதவி செய்ததாகவும், யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாரையும் மீட்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளனர்.
உள்ளூர் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் மருத்துவ உதவி பெற்று வருவதாகவும், இதுவரை கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |