பிரித்தானியாவில் குடியுரிமை தொடர்பில் அமுலுக்கு வந்த புதிய சட்டம்
பிரித்தானிய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
“Deprivation of Citizenship Orders (Effect during Appeal) Act 2025” எனப்படும் இந்தச் சட்டம், தீவிரவாதிகள், தீவிரவாத ஆதரவாளர்கள் மற்றும் பாரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பிரித்தானிய குடியுரிமையை தானாகப் பெற முடியாத வகையில் தடுக்கும் சட்டமாகும்.
முன்னதாக, குடியுரிமை நீக்கப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றால், அவர்களுக்கு குடியுரிமை தானாக மீண்டும் வழங்கப்படும்.
ஆனால், மேல்முறையீடுகள் தொடரும் நிலையில், இது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என அரசு கருதுகிறது.

புதிய சட்டத்தின் மூலம், அனைத்து மேல்முறையீடுகள் முடியும் வரை குடியுரிமை மீண்டும் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மேலும், ஒருவர் தங்கள் பிற நாட்டுக் குடியுரிமையை விலக்கி, பிரித்தானியராக மட்டுமே இருக்க முயற்சிப்பதை தடுக்கும் விதமாகவும் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், Stateless (நாடில்லா) நிலை ஏற்படும்போது, அவர்களை நாடு கடத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ், “இந்த சட்டம், நமது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கை” எனக் கூறியுள்ளார்.
2018–2023 காலத்தில், ஆண்டுக்கு சராசரியாக 12 பேரின் குடியுரிமை நீக்கப்பட்டது. புதிய சட்டம், குடியுரிமை நீக்கத்தின் காரணங்களை விரிவாக்கவில்லை, ஆனால், சட்ட நடைமுறையை உறுதிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK citizenship law 2025, British citizenship appeal ban, national security UK law, Deprivation of Citizenship Act, UK closes legal loophole, Shamima Begum citizenship case, UK immigration detention rules, British citizenship terrorism, UK Home Office new law, Dan Jarvis citizenship reform