வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்ற பிறகு...பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த முதல் கருத்து!
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்ற பிறகு மக்களுக்கு தேவையான விஷயங்களில் இனி நாம் கவனம் செலுத்த தொடங்குவோம் என பிரித்தானிய பிரதமர் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா காலத்து கட்டுப்பாடுகளை மீறியதற்காக இன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், போரிஸ் ஜான்சன் மொத்தமுள்ள 359 டோரி எம்.பிகளின் வாக்குகளில் 211 வாக்குகள் ஆதரவாக பெற்று 63 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றார்.
இந்தநிலையில், வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்ற பிறகு முதல்முறையாக பேசிய போரிஸ் ஜான்சன், முடிவு தீர்வானது என்று தெரிவித்தார், அத்துடன் அதன் அர்த்தம் என்னவென்றால் ஒரே அரசாங்கமாக இவற்றிலிருந்து முழுமையாக நாம் முன்னகர்ந்து மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என தெரிவித்தார்.
Prime Minister Boris Johnson says that the result of the confidence vote is an 'opportunity to put behind us all the stuff that people in the media like going on about'.
— Sky News (@SkyNews) June 6, 2022
Latest: https://t.co/mZ6c6iJNTd
? Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/3QywmXQpZV
மேலும் டோரி எம்.பி சகாக்களுக்கும், அவர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன், தற்போது நாம் செய்ய வேண்டியது ஒற்றை அரசாங்கமாகவும் கட்சியாகவும் ஒன்றிணைவது தான் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி!
தொடர்ந்து பேசிய போரிஸ் ஜான்சன், கன்சர்வேடிவ் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக தனது தலைமை குறித்த விவாதங்களை எங்களுக்கு பின்னுக்கு தள்ளுவதற்கு இது நல்ல தருணம் மற்றும் வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.