பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை இதயத்தில் குத்திக் கொன்ற நபர்: குற்றவாளி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற குற்றவாளியை மருத்துவ கண்காணிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவின் பாஸ்டன் பகுதியில் உள்ள லிங்கன்ஷையரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி லிலியா வால்டிட்(Lilia Valutyte) என்ற 9 வயதுடைய சிறுமி, இளைஞர் ஒருவரால் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டார்.
லிலியா வால்டிட் இளைஞரால் கத்தியால் குத்தப்படுவதற்கு முன்பு மாலை 6.15 மணியளவில் பவுண்டன் லேனில் உள்ள தனது தாய் பணிபுரிந்து வந்த கடைக்கு வெளியே ஹூலா ஹூப்(hula hoop) விளையாடி கொண்டு இருந்தார்.
ஆனால் அன்று தேவிதாஸ் ஸ்கெபாஸ் என்ற இளைஞரால் ஒன்பது வயது சிறுமி லிலியா இதயத்தில் கத்தியால் குத்தப்பட்ட பிறகு இரவு 7.11 மணியளவில் பாஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
காலவரையற்ற மருத்துவ கண்காணிப்பு
இந்நிலையில் 9 வயது சிறுமியை இதயத்தில் கத்தியால் குத்திக் கொன்ற தேவிதாஸ் ஸ்கெபாஸ் என்ற 23 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார் லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது விசாரணையில் லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர் என்றும், இரண்டாவது முறையாக தன்னுடைய நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை 20ம் திகதி வந்து இறங்கியுள்ளார்.
பின் ஆறு நாட்களுக்கு பிறகு பாஸ்டன் நகர மையத்தில் உள்ள வில்கோமிலிருந்து கத்தியை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ தினத்தன்று பொதுவாக 9 வயது சிறுமி லிலியாவின் அருகில் சென்று தன் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இறுதியில் இந்த வழக்கில் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு உள்ள மனநல பாதிப்புகளை கருத்தில் கொண்டு தற்போது அவருக்கு தண்டனைகள் வழங்க முடியாது என்றும், அவரை காலவரையற்ற மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |