பாலஸ்தீனத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா
பாலஸ்தீனத்தை ஒரு சுயாட்சி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளன.
இது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது பல நாடுகள் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்த முடிவு, அமெரிக்காவின் பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து விலகி, 140-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து புதிய வெளிநாட்டு கொள்கையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் இரு-நாடுகள் தீர்வுக்கான நம்பிக்கையை உயிர்ப்பிக்க இந்த அங்கீகாரம் அவசியம்' என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது ஹமாஸ் அமைப்பிற்கு வெகுமதி அல்ல என்றும், எதிர்கால பலஸ்தீன ஆட்சியில் ஹமாஸ் இடம்பெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, "இஸ்ரேலும் பலஸ்தீனமும் அமைதியான எத்ரிகாலத்தை நோக்கி நகர வேண்டும்" எனக் கூறி, G7 நாடுகளில் முதன்மையாக அங்கீகாரம் அளித்தார்.
அதேபோல் அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் இணைந்து, " காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுவிப்பு" ஆகியவை இந்த முயற்சியின் முதல் படியாகும் என தெரிவித்தனர்.
இஸ்ரேல் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிரித்துள்ளது. "இது ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும் செயல்" என வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால், பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் வர்சென் ஷாஹின், " இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னேற்றம்" என வரவேற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Palestine State recognition, UK Canada Australia recognize Palestine State