ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானுக்கு பிரித்தானியா கடும் கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கைக்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியா கண்டனம்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து ஈரான் பாரசீக கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக முடியது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடக்கியது ஈரானின் பொறுப்பற்ற செயல் என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் யவெட் கூப்பர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச நிதி நிலைமைகளை நேரடியாக அச்சுறுத்தி வருவதாகவும் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
சர்வதேச கடல் வழி பிராந்தியத்தை மூடுவது என்பது பிராந்தியம் சார்ந்த பிரச்சினை மட்டுமின்றி உலகளாவிய பொருளாதாரத்திற்கு விடப்படும் நேரடி சவால் என்று யவெட் கூப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்மட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய யவெட் கூப்பர், இராஜ தந்திர வழியில் நிலவும் சூழ்நிலையை சீர்செய்ய திட்டமிட்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.
40க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வணிக கப்பல்களுக்கான சுதந்திரமான போக்குவரத்தை உறுதிப்படுத்துதல், கடல் வழி பாதையை திறக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகிய குறித்து விவாதிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |