பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான முதல் கறுப்பின பெண்!
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரிஷி சுனக் விலகல்
பிரித்தானியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை தோற்கடித்து லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரிஷி சுனக் பதவி விலகினார்.
புதிய தலைவர்
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கெமி படேனாக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை என்பவரை தோற்கடித்து தலைவர் பதவிக்கு முன்னேறியுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கெமி படோனக் ஆளும் லேபர் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான அரசின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள் மீது கடுமையான முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |