அமெரிக்கா, பிரான்ஸ் சார்பை தவிர்க்கும் பிரித்தானியா., சொந்தமாக வெடிபொருள் உற்பத்தி
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெடிபொருள் சார்பில் இருந்து விடுபட, பிரித்தானிய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
BAE Systems எனும் பிரித்தானியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனத்தின் வழியாக, RDX (Hexogen) எனப்படும் வெடிபொருளின் உற்பத்தியை நாடு முழுவதும் விரைவில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, 155 மில்லிமீட்டர் துப்பாக்கி ஷெல்களை (artillery shells) தயாரிக்க தேவையான RDX அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால், டொனால்ட் ட்ரம்பின் பரபரப்பான வர்த்தகக் கொள்கைகள் மற்றும் US ITAR (International Trade in Arms Regulations) சட்டங்கள் காரணமாக, பிரித்தானியா உள்பட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க உபகரணங்களைப் பயன்படுத்த மறுக்கின்றன.
2025 கோடைக்குள், BAE Systems நிறுவனம் தனது உற்பத்தி திறனை 16 மடங்கு அதிகரிக்க உள்ளது.
ஒவ்வொரு வெடிபொருள் உற்பத்தி கன்டெய்னரும் ஆண்டுக்கு 100 டன் வெடிபொருள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
மேலும், இந்த நவீன தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கும் விற்பனை செய்யும் நோக்கமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மூலம், பிரித்தானியா தனது பாதுகாப்பு துறையில் முழுமையான சுயாதீனத்தையும், அமெரிக்க கட்டுப்பாடுகளின்றி ராணுவ பொருட்கள் விற்பனையையும் உறுதி செய்யவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |