பிரித்தானிய பொருளாதாரம் சரிவு - உற்பத்தித் துறையில் வீழ்ச்சி
பிரித்தானிய பொருளாதாரம் 2024 ஜனவரியில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது, இது எதிர்பார்க்காத வீழ்ச்சி எனக் கருதப்படுகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்ட தரவின்படி, உற்பத்தி (Manufacturing) துறை 1.1% வீழ்ச்சியடைந்ததே இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
எதிர்பார்ப்பு மற்றும் உண்மையான நிலை
Reuter செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, பொருளாதாரம் 0.1% வளர்ச்சி காணும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ஜனவரி மாத சரிவு, டிசம்பரில் ஏற்பட்ட 0.4% வளர்ச்சியை ஒரு அளவிற்கு பாதித்தது.
கடந்த மூன்று மாதங்களில் (நவம்பர் - ஜனவரி), பொருளாதாரம் 0.2% வளர்ச்சி கண்டுள்ளது, ஆனால் இது Reuter கணிப்பு (0.3%) விட குறைவாகவே உள்ளது.
முக்கிய துறைகள் மற்றும் தாக்கம்
உற்பத்தித் துறை 1.1% வீழ்ச்சி - உலோகம் மற்றும் மருந்து தொழில் மிகவும் மோசமான நிலையை சந்தித்தன.
தொழில் துறை - கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது குறைந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.
சேவை துறை 0.1% வளர்ச்சி - தொடர்ந்து மூன்றாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
கட்டுமான துறை 0.2% வீழ்ச்சி - கடுமையான பருவநிலை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், பிரித்தானிய பொருளாதார வளர்ச்சியை மீண்டும் மேம்படுத்த நிதியமைச்சர் ரேசல் ரீவ்ஸ் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |