கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா

Russo-Ukrainian War Ukraine Europe
By Arbin Mar 07, 2025 03:26 AM GMT
Report

விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே

குறித்த அசாதாரண பாதுகாப்பு திட்டத்திற்கு Operation Sky Shield என பெயரிட்டுள்ளனர். ஐரோப்பிய விமானப்படை மற்றும் பிரித்தானியாவின் RAF இணைந்து IAPZ என்ற Integrated Air Protection Zone ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா | Uk Europe Sky Shield Ukraine

இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த சிறந்த விமானிகள் தலைமை தாங்குவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் நேட்டோவுக்கும் தொடர்பில்லை என்றே விளக்கமளித்துள்ளனர்.

மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இதன் நோக்கமாக இருக்கும், இதில் cruise ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதே முதன்மையான இலக்கு என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மண்டலம் என்பது செயல்பாட்டில் உள்ள உக்ரைனின் மூன்று அணு மின் நிலையங்கள் மற்றும் ஒடேசா மற்றும் லிவிவ் நகரங்கள் உட்பட நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கும்.

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா | Uk Europe Sky Shield Ukraine

ஆனால், ரஷ்யாவுடன் நேரடி மேற்கத்திய நாடுகளின் மோதலுக்கான அச்சம் காரணமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியை ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவின் இந்த புதிய திட்டம் உள்ளடக்கவில்லை.

இதனிடையே, பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் இராணுவ நிபுணர்கள் பலர், இந்தத் திட்டமானது உக்ரைனில் 10,000 ஐரோப்பிய தரைப்படை வீரர்கள் களமிறங்குவதை விட அதிக இராணுவ, அரசியல் மற்றும் சமூக பொருளாதார தாக்கத்தை அடையக்கூடும் என பரிந்துரைத்துள்ளனர்.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி தயார்... ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி தயார்... ட்ரம்ப் அறிவிப்பு

உண்மையில் இந்த திட்டமானது 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களில் உக்ரைனுடன் இணைந்து முன்னாள் RAF விமானிகள் மற்றும் இராணுவ நிபுணர்கள் குழு ஒன்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அனுமதியை அளிக்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.

வல்லரசு நாடு ஒன்றை

தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் ட்ரம்ப் நிர்வாகம் படிப்படியாக ரத்து செய்து வரும் நிலையில் Operation Sky Shield திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா | Uk Europe Sky Shield Ukraine

மட்டுமின்றி, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தி, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

தமது திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த ஜெலென்ஸ்கி மீதான கோபம் காரணமாக, அமெரிக்கா அளிக்கவிருந்த பல பில்லியன் டொலர் ஆயுத உதவிகளை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக உக்ரைனின் இராணுவம் தற்போது மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்கிறது.

அமெரிக்காவின் எந்த உதவியும் இல்லாமல், உலகின் வல்லரசு நாடு ஒன்றை எதிர்த்து போரிடுகிறது. இன்னொரு பேரிடியாக இராணுவ உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் ட்ரம்ப் நிர்வாகம் நிறுத்தியது.

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா | Uk Europe Sky Shield Ukraine

இதனால், ரஷ்ய தாக்குதலை முறியடிக்கவும், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தவும் இனி உக்ரைனால் முடியாமல் போகலாம். அத்துடன், அமெரிக்கா பகிர்ந்துவரும் உளவு ரகசியங்களை பிரித்தானியாவும் இனி உக்ரைனுடன் பகிர்ந்துகொள்ள முடியாது.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், அமெரிக்காவின் HIMARS மற்றும் பிரித்தானியாவின் Storm Shadows ஏவுகணைகளை இனி உக்ரைன் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Operation Sky Shield செயல்பாட்டிற்கு வரும் என்றால், அது உக்ரைன் போரில் முக்கிய திருப்பமாக அமையும் என்றே கூறப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US