பிரித்தானிய விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம்: வெளியான அறிவிப்பு
பிரித்தானியா, விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது.
விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம்
பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களில் vignettes எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்துவந்தது.

நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதியின்படி, இனி அவர்களுடைய பாஸ்போர்ட்களில் vignettes எனப்படும் முத்திரையிடப்படாது.
அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் முறையில், e-visaவாக பதிவு செய்யப்படும்.
பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல்மயமாக மாற்றுவதின் மற்றொரு படியாக இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |